Blog

October:2021
எமது உணவு அமைப்பு நெருக்கடியில் உள்ளது – பெண் விவசாயிகள் தீர்வாக இருக்க முடியுமா?

உணவுப் பொருட்களின் சடுதியான விலை அதிகரிப்பு,  உணவுப் பற்றாக்குறை, பிரதான உணவுப் பொருட்களுக்காக  இறக்குமதியில் தங்கியிருந்தால் என்ற  அடிப்படையில் இலங்கை தற்போது பாரிய உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. உணவு குறைவு  தன்மை என்ற  அடிப்படையில் முதல்  ஐந்து இடங்களில் உள்ள வறிய நாடுகளில் ஒன்றாக  இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது.  (அபிவிருத்தி கற்கைகள்  நிறுவனம், 2021).

உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் வேளையில், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு சரியான விலையை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

எமது உலகம் ஆனது எமது உணவு தற்போது உற்பத்தி செய்யப்படும் முறையை  தக்கவைத்துக்கொள்ள முடியாது,  இலங்கை அதற்கு விதிவிலக்கல்ல.  இரசாயன உள்ளீடுகளில்  அதிக அளவில் தங்கியிருக்கின்றமை  ஆனது எமது  ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் என்பவற்றில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது

இலங்கையில் முறிவடைந்த  உணவு முறைமையை மாற்றுவதற்கான கொள்கை மற்றும் நடைமுறையில் மாற்றங்களின் தேவை என்பது இப்படி  வெளிப்படையாக இருந்ததில்லை. எமது உணவு அமைப்பில் அடிப்படை மாற்றம் தேவை. பெண்கள் அதை வழிநடத்த முடியுமா?

பெண்களின் பங்களிப்பு தேசிய கொள்கை கட்டமைப்புகளில் அங்கீகரிக்கப்படவில்லை அல்லது பிரதிபலிக்கவில்லை என்றாலும் இலங்கையின் விவசாயத் துறையில் அவர்களில் பங்களிப்பின் ஊடாக பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது ஆகும் 

தங்கள் சொந்த சமூகங்கள் முதல் பல் தேசிய நிறுவனங்கள் வரை பல நிலைகளில் பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், பெண் விவசாயிகள் உள்ளூர் உணவு முறைகளை வலுப்படுத்துவதில் தொடர்ந்து  தமது திறனை காட்டி வருகின்றனர். காலநிலை தீர்வுகளை வழிநடத்துகின்றதும், பாலின பாகுபாடான தடைகளை மீறி செயற்படுகின்றதும், உலகிற்கு தொடர்ந்து உணவளிக்கின்றதுமான  பெண் விவசாயிகளின் திறன் அரசாங்கங்கள் மற்றும் அபிவிருத்தி  நிறுவனங்களால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

பெண் விவசாயிகள் மற்றும்  கிராமப்புற பெண்கள் என்பவர்களுக்கு  விவசாய உற்பத்தி வளங்களுக்கான சமமான அணுகலை உறுதி செய்வதன் மூலம் பெண்கள் தங்களையும் உணவு முறைகளையும் பாதிக்கும் கொள்கை மற்றும் நடைமுறை விவாதகளில்  அர்த்தமுள்ள ஈடுபாடு மற்றும் செல்வாக்கு செலுத்த இயலக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் கூட்டாக  ஒரு பாரிய  விவாதத்தை மற்றும் வாதத்தை கட்டியெழுப்புவதை நோக்காக கொண்டுள்ளோம்  

 – உள்ளூர் உணவு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் மற்றும் உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும்.

-பெண் விவசாயிகளை ஆதரிப்பது, முதன்மை உற்பத்தியாளர்களாக இருந்து தொழில்முனைவோராக பெறுமதி சேர் சங்கிலியினை  உயர்த்துகிறது.

-உள்ளூர் பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பை அங்கீகரித்து அவர்களை தலைவர்கள் மற்றும் வளர்ச்சி பங்காளிகளாக சித்தரிக்கவும்.

-பெண் விவசாயிகளின் கிராமிய கடன்களை தீர்க்க, சமூக திறனை  வலுப்படுத்த மற்றும் காலநிலை தீர்வுகளை வழிநடத்த மற்றும்  பெண் விவசாயிகளின் திறனைத் கூட்டவும் நிலையான சுரண்டல் அல்லாத தீர்வுகளை வழங்குதல்

சட்டம் மற்றும் சமூக  நம்பிக்கை அமைப்பு  மற்றும் சாவித்திரி பெண்கள் இயக்கம் இணைந்து 17.10.21 அன்று உலக உணவு தினம் மற்றும் உலக கிராமப்புற பெண்கள் தினத்தை நினைவுகூரும் விதமாக பகிரங்க கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்வு பின்வருவனவற்றில் பொது உரையாடல்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது:

1. பெண் விவசாயிகள், உணவு இறையாண்மை மற்றும் விவசாயவியல்

2. கிராமப்புற பொருளாதாரத்தில் பெண்கள்

3. பகிரங்க செயலமர்வுகளை ஆரம்பித்தல் (public campaign ) , சமத்துவ அறுவடை: உணவு இறையாண்மைக்கு வழி வகுக்கும் பெண் விவசாயிகள்

மேற்கூறப்பட்ட விவாதங்களில் பெண் விவசாயத் தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகம் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களின் பிரதிநிதித்துவம் இருக்கும்.

சமூகவலையமைப்பின் மூலமான பொது உரையாடல் 17.10.21 அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இடம்பெறும் மற்றும் நேரடி ஒளிபரப்பு  என்ற முகப்புத்தக முகவரி மூலம் ஒளிபரப்பப்படும்.

October 2021 Friday 15th